×

இளம்பெண் தூக்கில் சாவு சப்.கலெக்டர் விசாரணை

தூத்துக்குடி, செப்.11: தூத்துக்குடி தெற்கு சங்கரப்பேரியைச் சேர்ந்த லாரி டிரைவர் ஈஸ்வரன். இவரது மனைவி வனிதா (25). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக வனிதா கடந்த 8ம்தேதி மாலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை பார்த்த உறவினர்கள் வனிதாவை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் அவர் இறந்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம் தலைமையிலான சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வனிதாவுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த சம்பவம் வரதட்சணை காரணாமாக நடந்திருக்கலாமோ என்பது குறித்து தூத்துக்குடி சப் கலெக்டர் சிம்ரான்ஜித்சிங் கலோன் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : death ,Investigators ,teenager ,
× RELATED ராணி மேரி கல்லூரியில் வாலிபர் மர்ம சாவு