×

சாத்தான்குளம், குலசேகரன்பட்டினம் பகுதிகளில் நாளை மின்தடை

திருச்செந்தூர், செப்.11: சாத்தான்குளம், குலசேகரன்பட்டினம் பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. திருச்செந்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் பிரபாகர் விடுத்துள்ள செய்திகுறிப்பு:  திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட சாத்தான்குளம் உபமின் நிலையத்திலிருந்து செல்லும் கோமனேரி பீடரில் அவசரகால பராமரிப்பு பணி நாளை (12ம்தேதி) நடைபெற உள்ளதால் 11 கேவி கோமனேரி பீடர் மூலமாக மின்னூட்டம் பெறும் அமுதுண்ணாக்குடி, நெடுங்குளம், மதகநேரி, வேலன்புதுகுளம், துவர்குளம், கோமனேரி ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது.

இதேபோல் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவினை முன்னிட்டு உடன்குடி உபமின் நிலையத்திலிருந்து செல்லும் குலசேகரன்பட்டினம் மின்னூட்டியில் நாளை (12ம்தேதி) முதல் அக். 2ம்தேதி வரை பராமரிப்பு பணிகளுக்காக தேவைக்கேற்ப அவ்வப்போது மின் விநியோகம் துண்டிப்பு செய்யப்படும். இதனால் குலசேகரப்பட்டினம் மின்னூட்டி மூலமாக மின்னூட்டம் பெறும் குலசேகரன்பட்டினம், மணப்பாடு மற்றும் சிறுநாடார்குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்கு மின்தடை ஏற்படும்.

Tags : Power station ,
× RELATED மின்னல் தாக்கியதில் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் தீ