×

ஆத்தூர் பகுதியில் 22 இடங்களில் எச்சரிக்கை விளக்கு

ஆறுமுகநேரி, செப்.11: ஆத்தூர் காவல் எல்கைக்குட்பட்ட 22 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து எச்சரிக்கை விளக்குகளை திருச்செந்தூர் டிஎஸ்பி பாரத் துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்முறையாக ஆத்தூர் காவல்நிலையத்திற்குட்டபட்ட பகுதிகளான பழையக்காயல், புல்லாவெளி, முக்காணி, மேல ஆத்தூர் விலக்கு, கீரனூர் விலக்கு, ஆத்தூர் மெயின் பஜார் உள்பட 22 இடங்களில் சுமார் ரூ.3.52 லட்சத்தில் போக்குவரத்து எச்சரிக்கை குறிக்கும் சிகப்பு மின்னும் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்கவிழா ஆத்தூர் காவல்நிலையத்தில் நடந்தது.  

விழாவிற்கு திருச்செந்தூர் டிஎஸ்பி பாரத் தலைமை வகித்தார். காவல் நிலையம் அருகில் உள்ள மேலாத்தூர் விலக்கில் எச்சரிக்கை விளக்குகளை ஆன் செய்து டிஎஸ்பி  துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆத்தூர் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ்ஆனந்த், மற்றும் போலீசார் பங்கேற்றனர்.  
அடிக்கடி விபத்துக்கள் நடக்கும் இடங்கள், மெயின் ரோட்டில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் சாலைகள், சாலை சந்திப்புகள், திருப்பங்கள் ஆகிய இடங்களில் இந்த எச்சரிக்கை மின்னும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை கண்டு வாகன ஓட்டிகள் மெதுவாக வாகனங்களை இயக்குவது மூலம் விபத்துக்கள் குறையும். இந்த எச்சரிக்கை விளக்குகள் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆத்தூர் காவல்நிலையத்தில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ளது. இது மேலும் விரிவுபப்படுத்தப்படும் என டிஎஸ்பி பாரத் தெரிவித்தார்.

Tags : places ,area ,Attur ,
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...