×

தூத்துக்குடி மாவட்டத்தில் 13ம்தேதி அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்

தூத்துக்குடி, செப்.11: தூத்துக்குடி மாவட்டகலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் 13ம்தேதி (வெள்ளிக்கிழமை) அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது. தூத்துக்குடி வட்டத்தில் வர்த்தகரெட்டிபட்டி - ராமநாதபுரம் கிராமத்திலும், வைகுண்டம் வட்டத்தில் பேரூர் கிராமத்திலும், திருச்செந்தூர் வட்டத்தில் மெஞ்ஞானபுரம் கிராமத்திலும் சாத்தான்குளம் வட்டத்தில் பன்னம்பாறை கிராமத்திலும், கோவில்பட்டி வட்டத்தில் முடுக்குமீண்டான்பட்டி கிராமத்திலும், விளாத்திகுளம் வட்டத்தில் வெள்ளையம்மாள்புரம் கிராமத்திலும், எட்டயபுரம் வட்டத்தில் கீழஈரால் கிராமத்திலும், ஓட்டப்பிடாரம் வட்டத்தில் ஆரைக்குளம் கிராமத்திலும், கயத்தாறு வட்டத்தில் கொத்தாளி கிராமத்திலும், ஏரல் வட்டத்தில் நாசரேத் கிராமத்திலும் முகாம் நடைபெறுகிறது.

முகாம்களில் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு-இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.

Tags : Locations ,13th Amma Amma Project Camp ,Thoothukudi District ,
× RELATED அக்னி நட்சத்திரம் நிறைவுபெறும்...