×

காரைக்காலில் புதுக்குளம் தூர்வாரும் பணி மும்முரம்

காரைக்கால், செப்.11: காரைக்கால் திருநள்ளாறு சாலை ஒழுங்கு முறை விற்பனை கூடம் அருகே உள்ள புதுக்குளம், கைலாசநாதர்தேவஸ்தானம் சார்பில், தூர்வாரும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.காரைக்காலில் ஒவ்வொரு அரசுத்துறையும் மற்றும் கோயில்கள், தனியார் தொழிற்சாலைகள் அந்தந்த பகுதிகளில் உள்ள குளம், வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா நம் நீர் திட்டத்தை அறிமுகம் செய்து பணியை தீவிரப்படுத்தி வருகிறார். அதன்படி, இதுவரை சுமார் 140க்கு மேற்பட்ட குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக, காரைக்கால் திருநள்ளாறு சாலை ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் அருகே உள்ள புதுக்குளம் கைலாசநாதர், நித்யகல்யாணப் பெருமாள் தேவஸ்தானம் சார்பில் தூர்வாரும் பணிதொடங்கியுள்ளது.

முதல் கட்டமாக, குளம் முழுவதும் மண்டிக்கிடந்த ஆகாய தாமரை செடிகள் அகற்றப்பட்ட நிலையில், குளத்தில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் கிடப்பதால், அவற்றை எவ்வாறு அகற்றி அடுத்தக்கட்டப் பணிகள் மேற்கொள்வது என்பது குறித்து கோவில் அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத் தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன்கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் பலர் ஆலோசனை நடத்தி வந்தனர்.தொடர்ந்து, காரைக்கால் தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ அசனா குளத்தை ஆய்வு செய்து, குளத்தை முழுமையாக தூர்வாரி, தொடர்ந்து, குளத்தில் கழிவுநீர், குப்பைகள் கொட்டாமல் இருக்க, சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் இதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என எம்எல்ஏ கேட்டுகொண்டார்.

Tags : Karaikal ,
× RELATED காரைக்காலை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி