×

பக்தர்கள் நேர்த்திக்கடன் நாகை அடுத்த நாகூரில் மீன்வள பல்கலை கழகத்தில் பி.டெக் பாடப்பிரிவு துவக்கம்

நாகை, செப்.11: நாகையை அடுத்த நாகூரில் தமிழ்நாடு ஜெயலலிதா மீன் வளப் பல்கலைக்கழகத்தில் உறுப்பு கல்லூரியாக இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டு அதில் பி.டெக் (ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல்) படிப்பு தொடக்க விழா நேற்று முந்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பல்கலைகழக துணை வேந்தர் பெலிக்ஸ் தலைமை தாங்கினார், கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நாகை கலெக்டர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.

விழாவில் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பி.டெக் (ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல்) படிப்புக்கு கலந்தாய்வின் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கியும், ஆற்றல் மற்றும் சுற்றுசூழல் பொறியியல் கல்லூரியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.



Tags : Launch ,Fisheries University ,
× RELATED நாகை மீன்வள பல்கலை.க்கு ஜெயலலிதா பெயர்...