கோடியக்கரையில் கொள்ளை போன ஐம்பொன் சிலைகளுக்கு பரிகார பூஜை

வேதாரண்யம், செப்.11: வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் கொள்ளைபோன 5 ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டு பரிகார பூஜை செய்வதற்காக கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் கோடிமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயி உள்ள ஐம்பொன்னாலான மாரியம்மன் சிலை மற்றும் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை சிலைகளை கடந்த மாதம் 17ம்தேதி மாயமானது. இது குறித்து கோயில் நிர்வாகி பாலசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகை மற்றும் தடைய அறிவியல் நிபுணர்களுடன் சோதனை நடத்தினார்.பின்னர் தொடர்ந்து நாகையிலிருந்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர். ஆனால் எந்தவித தடயம் கிடைக்கவில்லை.

தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் 5 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து போலீசார் ஐம்பொன் சிலைகளை மீட்டனர். பின்னர் கும்பகோணம் கோர்டில் சிலைகள் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோயில் நிர்வாகி பாலசுப்பிரமணியன் தகுந்த ஆதாரங்களை கோர்ட்டில் சமர்பித்து சிலைகளை பெற்று கோடியக்கரை கோடிமுத்து மாரியம்மன்கோயிலுக்கு கொண்டு வந்து வைக்கப்பட்டது.இரண்டு நாளில் பரிகார பூஜைகள் செய்து சாமி சிலைகள் பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்படும் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags : Devotees ,
× RELATED முருகன் கோவில்களில் தைப்பூசத்...