×

சுயநிதி பிரிவில் பிஎப்எஸ்சி துவங்க எதிர்ப்பு நாகூர் மீனவள பல்கலைக்கழக மாணவர்கள் தர்ணா போராட்டம்

நாகை, செப்.11:  சுயநிதி பிரிவில் பிஎப்எஸ்சி தொடங்க எதிர்ப்பு தெரிவித்து நாகூர் மீன்வள பல்கலைக்கழக மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாகையை அடுத்த நாகூரில் உள்ள மீன்வளப் பல்கலைக் கழக மாணவர்கள்  கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் உள்ள ஒரு கல்லூரியில் சுய நிதி பிரிவாக பி.எப்.எஸ்சி. (இளங்கலை மீன்வள அறிவியல்) தொடங்க உள்ளதாகவும், அதற்கான  விண்ணப்பங்களும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சுய நிதி பிரிவில் பி.எப்.எஸ்சி. பிரிவை தொடங்கப்பட்டால் அதிக மதிப்பெண்கள் பெற்று வகுப்பில் சேர்ந்துள்ள  எங்களை போன்ற மாணவர்கள்  பாதிப்பு ஏற்படுத்தும்,  சுய நிதி பிரிவில் சேரும் மாணவர்களுக்கு மதிப்பெண் தகுதியாக இல்லாமல்  மாணவர் சேர்க்கை நடைபெறும். இதனால் எங்களுக்கு வேலை வாய்ப்புகள் குறையும் என்றும் மயிலாடியில் சுய நிதி பிரிவில் பி.எப்.எஸ்சி. பிரிவை சேர்க்க கூடாது என கூறியும் ஆணையை  உடன் திரும்ப பெற வேண்டும் என்று  கூறி  கோஷங்களை எழுப்பியவாறு பல்கலைகழகம் வாசலிலேயே தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.  

இதுகுறித்து பல்கலை கழக துணை வேந்தர் பெலிக்ஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பி.எப்.எஸ்சி. பிரிவை சுயநிதியில் சேர்ப்பது குறித்து மாணவர்கள் தவறாக  புரிந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை  மாணவர்கள் கைவிட வேண்டும்,  2025ம் ஆண்டில் 5,000 பி.எப்.எஸ்சி. பட்ட தாரிகளை ஆண்டு ஒன்றிற்கு  உருவாக்க வேண்டும். தற்போது இந்தியா 1,000 மாணவர்களை  மட்டுமே உருவாக்குகிறது. அரசுக்கு நிதி தேவைப்படுவதால் சுயநிதி கல்லூரியை  தொடங்க வேண்டிய அவசியம் உள்ளது என்றார்.

Tags : Nagpur Fisheries University ,start ,
× RELATED பொதுமக்கள் வௌியே செல்ல அச்சம் கோடை துவங்கும் முன் சுட்டெரிக்கும் வெயில்