×

நாகையில் நடந்த வாகன சோதனையில் 2 மாதத்தில் 341 வாகனங்கள் பறிமுதல்

நாகை, செப்.11: நாகையில் நடந்த வாகன சோதனையில் இரண்டு மாதத்தில் மட்டும் 341 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 298 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாகை எஸ்.பி.ராஜசேகரன் உத்தரவின் பேரில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடத்திய வாகன சோதனையின் போது, கடந்த மாதம் மட்டும் (ஆகஸ்ட்) 88 மது அருந்தி வாகனம் ஓட்டுதல், 91 வாகனத்தில் அதிக பாரம் எற்றுதல், 1114 பேர் அதி வேகத்தில் வாகனம் ஓட்டுதல், 876 கனரக வாகனங்களில் பயணிகளை ஏற்றுவது, 2,897 பேர் செல்போன் பேசி கொண்டு வாகனம் ஓட்டுதல், 5,777 சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் என மொத்தம் 61,028 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்களிடம் இருந்து ரூ. 49,14,400 அபராத தொகை வசூல் செய்யபப்டடுள்ளது. அதேப்போல் மணல் கடத்தல் தொடர்பாக மாவட்டம் முழுவதும் நடத்திய தீவிர சோதனையில் ஆகஸ்ட் மாதத்தில் 38 வழக்குகள் பதியப்பட்டு, 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 12 லாரிகள், 10 டிராக்டர்கள், 7 டாடா ஏசி வாகனம், 5 மாட்டு வண்டிகள், 2 இரண்டு சக்கர வாகனம் என 36 வாகனஙகள் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் செப்டம்பர் மாதத்தில் 286 வக்குகள் பதியப்பட்டு 265 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 73 லாரிகள், 167 டிராக்டர் மற்றும் லோடு ஆட்டோ. 65 மாட்டுவண்டிகள் என 305 வாகனங்கள் பறிமுல் செய்யப்பட்டுள்ளது.


Tags : vehicle inspection ,Naga ,
× RELATED நாகையில் போக்குவரத்து மாற்றம்