×

திருவாரூர் நெல் இயந்திர நடவுக்கு குறைந்த செலவில் பாய் நாற்றங்கால் அமைத்து அதிக லாபம் பெறலாம்

நீடாமங்கலம்,செப்.11: நெல் இயந்திர நடவுக்கு குறைந்த செலவில் பாய் நாற்றங்கால் அமைத்து அதிக லாபம் பெறலாம் என நீடாமங்கலம் வேளாண்மை உதவி இயக்குனர் தேவேந்திரன்தெரிவித்துள்ளார்.இது குறித்து தேவேந்திரன் கூறுகையில் நீடாமங்கலம் வேளாண்மை கோட்டத்தில் தற்போது சம்பா மற்றும் தாளடி நடவுகளுக்கான விதை தெளிப்பு பணிகள் நடை பெற்று வருகிறது.இந்நிலையில் நீடாமங்கலம் அருகில் உள்ள பரப்பனாமேடு கிராமத்தில் சம்பா நடவுக்கு பாய் நாற்றங்கால் அமைக்கும் பணி நடை பெற்றுள்ளது.ஒரு ஏக்கர் நடுவதற்கு 100மீட்டர் நாற்றங்கால் தயார் செய்ய வேண்டும்.சமமான நிலத்தை நீர் ஆதாரத்திற்குப் பக்கத்தில் தேர்ந்தெடுக்கவேண்டும்.பிளாஸ்டிக் விரிப்பை விரித்து அல்லது பாலிதீன்பைகளை உபயோகித்து மெல்லிய உயர்த்தப்பட்ட மர சட்ட படுக்கையில் வைப்பதால் வேர்கள் வளர்ந்து மண்ணின் ஆழத்திற்கு செல்லாமல் தடுக்கப்படுகிறது. ஏக்கருக்கு7&8 கிலோ விதை போதுமானது .ஊற வைத்த விதைகளை கட்டம் கட்டமாக உள்ள மர சட்டம் ட்ரேயில் தெளித்து வைக்கோலில் மூடி முளைவந்த பிறகு திறக்க வேண்டும்.பின்னர் வளர்ந்த நாற்றுகளை 14-15 தினங்கள் ஆன 1 அல்லது 2 நாற்றுகள் வைத்து இயந்திரம் மூலம் நடவேண்டும்.நடப்பட்ட 7 மற்றும் 10வது நாட்களுக்கு பிறகு இடையில் இடைவெளியை நிரப்ப வேண்டும். நாற்றுகளை நாற்றங்காலிலிருந்து எடுத்த 30 நிமிடங்களுக்குள் நடவு வயலில் நடவு செய்திடல் வேண்டும்.

கன மழை பெய்து கொண்டிருக்கும் பகுதிகளில் பயிர் உருவாக்கம் சற்று கடினமாக இருக்கலாம். (தமிழ்நாடு வடகிழக்கு பருவமழைகாலங்களில்) நாற்றுகளை 25க்கு 25(10க்கு10அங்குலம்)சதுரத்தில் நடவு செய்ய வேண்டும்.சூழல்களைப்பான் கோனோவிடர் களை எடுக்கும் கருவி இரண்டு வரிசை களையெடுக்கும் மின்கருவி பயன்படுத்த வேண்டும்.முன்னோக்கி மற்றும் பின் நோக்கு நகரும் களை கருவி மூலம் களை யெடுத்து நட்ட 10- 15 நாட்களுக்குபிறகு வரிசைகள் மற்றும் திசையில் 7- 10 நாட்கள் இடை வெளியில் மண்ணுக்கு காற்றோட்டம் அளிக்க வேண்டும். வேர்களுக்கு அருகில் உள்ள கைக்களை மூலம் களைகளை அகற்றலாம். இதனால் தூர் அதிகம் வரும். பயிருக்குநல்ல காற்றோட்டம் கிடைக்கும். பூச்சிகள் தொல்லை இருக்காது,குறைந்த உர செலவாகும் குறைந்த தண்ணீர் செலவாகும் இதனால் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம் என்றார்.

Tags : Thiruvarur Paddy ,
× RELATED திருவாரூர் நெல் கொள்முதல்...