×

அனுமதியின்றி டிஜிட்டல் பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

திருவாரூர், செப். 11: திருவாரூர் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி டிஜிட்டல் பேனர்களை வைக்க கூடாது.மீறி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி அரசியல் கட்சிகள்,திருமண நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படும் பட்சத்தில் சாலைகளில் வாகன போக்குவரத்து நெருக்கடி மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு போன்றவை ஏற்படுவதால் அதற்கு நீதிமன்றமானது தடைவிதித்துள்ளது. எனவே மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி டிஜிட்டல் பேனர்கள் மற்றும் பிளக்ஸ் போர்டுகள் வைக்க கூடாது இதனை மீறி வைக்கப்படும் போர்டுகள் பட்சத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நகராட்சிகள் சட்டம் 1920 படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . இவ்வாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags : Collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...