×

அகற்றி விட்டு புதிதாக கட்டி தர கோரிக்கை மன்னார்குடியில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி

மன்னார்குடி, செப். 11: உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு மன்னார்குடியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.சர்வதேச தற்கொலை தடுப்பு சங்கம் மற்றும் உலக சுகாதார மையம் ஆகிய வற்றின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த 2003ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் செப்டம் பர் 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நாளாக கடைப்பிடிக்கப் படுகிறது. இந்திய அளவில் தமிழகத்தில்தான் தற்கொலை செய்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.உலக அளவில் ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள் கின்றனர். நாள்தோறும் சராசரியாக 3 ஆயிரம் பேர் செய்கின்றனர். இந்தியாவில் ஆண்டுதோறும் 1 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். 2012 கணக் கெடுப்பின்படி தமிழகத்தில் ஆண்டுக்கு 15 ஆயிரம் பேர் தற்கொலை செய்கின் றனர். தினமும் 20க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக் கைகள் எடுக்கப் படுகின்றன. இந்திய அளவில் தற்கொலை செய்பவர்கள் எண்ணிக்கையில் முறையே தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்கள் முதல் 3 இடங்களில் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.இந்நிலையில் தற்கொலை செய்து கொள்வதை தடுக்கும் நோக்கில் செரிஸ் உளவியல் ஆலோசனை மையம், ராஜகோபால சுவாமி அரசினர் கலைக் கல்லூரி என்எஸ்எஸ் மற்றும் என்சிசி மாணவர்கள் இணைந்து உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு மன்னார்குடியில் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

முன்னதாக மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் அருகில் இருந்து துவங்கியை பேரணியை இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணிகள் ஏற்பாடுகளை செரிஸ் உளவியல் ஆலோசனை மையம்சார்பில் பிரகாஷ் செய்திருந்தார். பேரணிக்கு கல்லூரி முதல்வர் (பொ ) ரவி தலைமை வகித்தார்.பேரணியின் நோக்கங்கள் குறித்து கல்லூரியின் என்சிசி அலுவலர் ராஜன், என்எஸ்எஸ் அலுவலர்கள் பிரபாகரன், சத்யா தேவி, ஆகாஷ் ஆகியோர் பேசினர். பேரணி முக்கிய கடைவீதி வழியாக சென்று அரசுக்கல்லூரி முன்பு நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் தற்கொலை தடுப்பு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் பிடித்து கொண்டு சென்றனர். முடிவில் தமிழ்த்துறை பேராசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.


Tags : awareness rally ,World Suicide Prevention Day ,Mannargudi ,
× RELATED திருவாடானையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி