×

வெள்ளி மலர் வெள்ளிதோறும் படியுங்கள் பேராவூரணி வட்டத்தில் 12 கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

பேராவூரணி, செப். 11: பேராவூரணி தாலுகாவில் உள்ள வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள 12 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 17ம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து பேராவூரணி தாசில்தார் ஜெயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பேராவூரணி வட்டத்தில் வருவாய் கிராமங்களில் 12 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. காலி பணியிடங்களுக்கு பேராவூரணி வட்டத்துக்கு உட்பட்ட கிராமம் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் உள்ளவர்கள் மட்டும் இனசுழற்சி அடிப்படையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக முதுநிலை வரிசையின்படி நியமனம் செய்ய விண்ணப்பங்களை வரும் 17ம் தேதிக்குள் பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் . கல்வி தகுதியாக குறைந்தபட்சம் 5ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10ம் வகுப்பு இறுதி தேர்வில் தோல்வியுற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். தகுதியுள்ள மனுதாரர்கள் பேராவூரணி தாலுகா அலுவலகத்தில் நடைபெறும் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முக தேர்வில் கலந்து கொள்ள தனித்தனியே அழைப்பு கடிதம் அனுப்பப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Grama Niladhari ,Peravurani Circle ,
× RELATED திருவண்ணாமலையில் நாளை நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ரத்து