×

இயந்திரத்தில் நடவு செய்தால் நெற்பயிர்களில் அதிகமான வளர்ச்சி இருக்கும் வேளாண்துறை இயக்குனர் தகவல்

கும்பகோணம், செப். 11: இயந்திரம் உதவியுடன் நடவு செய்தால் நெற்பயிர்களில் அதிகமான வளர்ச்சி இருக்கும் என்று வேளாண்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.திருவிடைமருதூர் வேளாண்மை உதவி இயக்குனர் இயக்கிய ரவிச்சந்திரன் வெளியி–்ட்டுள்ள செய்திக்குறிப்பு: உணவு தானிய இயக்கத்தில் தற்போது குருவை 5000 ஹெக்டேரும், சம்பா 1,700 ஹெக்டேரும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை துறை மூலம் 50 சதவீத மானிய விலையில் விதை நெல் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. சூடோமோனஸ் என்ற இயற்கை பூஞ்சானக்கொல்லி மூலம் விதை நேர்த்தி செய்யப்படுவதால் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனஸ் விதை நேர்த்தி செய்ய தேவைப்படும். மேலும் ஜிங்க் சல்பேட் 25 கிலோ நெல் நுண்ணோட்டம் 12.5 கிலோ ஒரு ஹெக்டருக்கு இடுவதால் பயிருக்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கிறது. இதன்மூலம் அதிக மகசூல் எடுக்க முடியும்.சம்பா பருவத்திற்கு என 1009 நெல் ரகங்கள் மற்றும் கோ 50 ஏற்றதாக உள்ளது. சம்பா நடவு பணிகளை பொறுத்தவரை 80 சதவீதத்துக்கு மேலாக நடவு இயந்திரம் மூலம் நடவு செய்யப்படுகிறது. பாய் நாற்றங்கால் அமைக்கபட்டு பல்வேறு இடங்களில் இயந்திர நடவு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இயந்திர நடவு மூலம் நெல் பயிர்கள் அதிக தூர்பிடித்து அதிகமான வளர்ச்சி இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Department of Agriculture ,
× RELATED கன்னிப்பூ சாகுபடி தொடக்கம் நாற்று...