×

கும்பகோணத்தில் 13ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கும்பகோணம், செப். 11: கும்பகோணம் ஆர்டிஓ அலுவலகத்தில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 13ம் தேதி நடக்கிறது. கும்பகோணம் ஆர்டிஓ வீராச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கும்பகோணம் ஆர்டிஓ அலுவலகத்தில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 13ம் தேதி நடக்கிறது. கூட்டத்தில் கும்பகோணம், திருவிடைமருதூர். பாபநாசம் ஆகிய 3 தாலுகாக்களில் உள்ள முன்னோடி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று கோரிக்கைகளை தெரிவிக்கலாம். மேலும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தொடர்புடைய கோட்ட அளவிலான அதிகாரிகள் பதில் அளிக்கின்றனர். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Farmers' Oversight Meeting ,Kumbakonam ,
× RELATED திருவாரூரில் மே 21-ம் தேதி விவசாயிகள்...