×

பாபநாசத்தில் வக்கீல் சங்க கூட்டம்

பாபநாசம், செப். 11: பாபநாசத்தில் வக்கீல் சங்க கூட்டம் நேற்று நடந்தது. வக்கீல் சங்க தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பணியிடை மாற்றத்தை ரத்து செய்யக்கோரி நேற்று ஒரு நாள் மட்டும் நீதிமன்ற பணியிலிருந்து விலகியிருப்பது. வக்கீல் சங்க தேர்தலை 2020 மார்ச் மாதம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வக்கீல் சங்க உறுப்பினர்கள் பாலசந்தர், இளையராஜா, சிவக்குமார், கார்த்திக்கேயன், வெற்றிச்செல்வன், சதீஸ், பாலசுப்பிரமணியன், பன்னீர்செல்வம், சுரேஷ், மணிகண்டன் உள்ளிட்ட பங்கேற்றனர்.


Tags : meeting ,Advocate's Association ,Papanasam ,
× RELATED திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த...