×

பொதுப்பணித்துறை தகவல் பேராவூரணி அரசு கல்லூரியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம்

சேதுபாவாசத்திரம், செப்.11: பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் தனராஜன் தலைமை வகித்தார். தமிழ்த்துறை பேராசிரியர் ராணி முன்னிலை வகித்தார். இதில் மனிதனின் உடல் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துகளின் அவசியம், சத்தான சரிவிகித உணவுகளை வளரிளம் பருவத்தினர் எடுத்து கொள்வது, சத்தான உணவுகளை உட்கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம். இயற்கையான உணவு முறை, உடற்பயிற்சியும் இருந்தால் நோயற்ற நல்வாழ்வு வாழலாம் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேராவூரணி வட்டார அங்கன்வாடி பணியாளர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கவுரவ விரிவுரையாளர் ராஜவினோதா நன்றி கூறினார்.

Tags : Government College ,Nutrition Awareness Camp ,Peravurani ,
× RELATED திருவாரூர் மத்திய பல்கலைக்கழக...