×

ஆலங்குளம், அம்பையில் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்

ஆலங்குளம், செப்.10:  ஆலங்குளம், அம்பையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது.நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அறிவுரையின் பேரில் ஒருங்கிணைந்த பள்ளிகல்வி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பூபதி ஆலோசனையின்படி ஆலங்குளம் வட்டார வளமைய வளாகத்தில் மாற்று திறனாளிகளுக்கு மருத்துவமுகாம் நடைபெற்றது.உதவி திட்ட அலுவலர் சேதுசொக்கலிங்கம் தலைமை வகித்தார். ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி தலைமையாசிரியர் இம்மானுவேல் முன்னிலை வகித்தார். மேற்பார்வையாளர் அமுதா ஜாஸ்மின் துவக்கி வைத்து பேசினார். ஆசிரியர் பயிற்றுநர் வளர்மதி வரவேற்றார். முகாமில் 183 மாணவர்கள் பங்கேற்று பயன்பெற்றனர். இதில் 75 மாணவர்களுக்கு உதவி உபகரணங்களான கண்ணாடி, பேருந்து, ரயில் இலவச பயண அட்டை, சக்கர நாற்காலி உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள், சலுகைகள் பெறுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் மத்திய, மாநில அரசிடம் இருந்து பல்வேறு அரசு நலத்திட்டங்கள் பெறுவதற்கு 17 மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

முகாமில் வட்டார வளமைய இயன்முறை மருத்துவர் பாலகண்ணன், மனநல மருத்துவர் சுரேஷ், எலும்புமுறிவு மருத்துவர் ரவிச்சந்திரன், கண் சிறப்பு மருத்துவர் ராஜலட்சுமி, காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர் மணிமாலா மற்றும் கடையம், அம்பை, தென்காசி கீழப்பாவூர், பாப்பாக்குடி ஆகிய வட்டார வள மையங்களை சேர்ந்த இயன்முறை மருத்துவர்கள், சிறப்பாசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். உள்ளடங்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் சுகந்தி நன்றி கூறினார்.
அம்பை:  அம்பை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி ) சண்முகநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். 2 நாட்கள் நடந்த முகாமில் அம்பை தாலுகாவிற்குட்பட்ட 500 க்கும் மேற்பட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு மனு அளித்தனர். ஏற்பாட்டினை விகேபுரம் அடையகருங்குளம் அன்னை ஜோதி சேவா அறக்கட்டளை செயலாளர் செல்வகுமார் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.  இதில் மாவட்ட மாற்று திறனாளிகள் அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள், அவர்களது உறவினர்கள் பாதுகாவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Disaster Relief Medical Center ,Alangulam ,
× RELATED அமராவதி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி