×

கண்டியப்பேரி குளத்தில் ஷட்டர்களை சீரமைக்க வேண்டும்

நெல்லை, செப். 10:  தமிழக விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார், நெல்லை கண்டியப்பேரி விவசாயிகள் சங்க தலைவர் சண்முகராஜ், செயலாளர் தங்கையா, பொருளாளர் குமார் மற்றும் விவசாயிகள் நேற்று கலெக்டரிடம் அளித்த மனு:  கண்டியப்பேரி குளத்து பாசனத்தில் புதிதாக கட்டியுள்ள மடைகள் சரியாக அமைக்கப்படவில்லை. இதனால் ஷட்டர்கள் சரியாக பொருந்தவில்லை. ஷட்டர் முழுமையாக ஒரு அடி உயர்ந்துள்ளது. ஷட்டர் அடைபடாத காரணத்தால் வீணாக தண்ணீர் வெளியேறி செல்கிறது.  ஷட்டர் பொருத்தாத மடைகளில் தண்ணீர் வெளியேறி வருகிறது. மடை முன்பு குவித்து வைக்கப்பட்டுள்ள மண்ணையும் சரி செய்திட வேண்டும். கண்டியப்பேரி குளம் நிரம்புவதற்கு தேவையான பணிகளை செய்திட பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும். தண்ணீர் வீணாக வெளியேறுவதால் யாருக்கும் எவ்வித பயனும் இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : pond ,Kandiyaperi ,
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...