×

சம்பன்குளத்தில் நாராயணசுவாமி கோயில் தேரோட்டம்

கடையம், செப். 10:  கடையம் அருகே சம்பன்குளத்தில் அன்பு சமதர்மபதி அய்யா நாராயணசுவாமி கோயில் தேரோட்ட வைபவம் நடந்தது. திருவிழாவை முன்னிட்டு கடந்த 6ம் தேதி இரவு 7மணிக்கு திருஏடு வாசிப்பு நடந்தது. 8 மணிக்கு 108 திருவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. 9 மணிக்கு அய்யா வைகுண்டரின் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இரவு 11 மணிக்கு குதிரை வாகனத்தில் அய்யா கலிவேட்டை ஆடி வருதல் நிகழ்ச்சி நடந்தது. 7ம் தேதி அன்று இந்திர வாகனத்தில் அய்யா பவனி வருதல் நிகழ்ச்சி நடந்தது. 8ம் தேதி அன்று அத்ரி மலையிலிருந்து சந்தனகுடம் எடுத்து வரப்பட்டது. இரவு 10 மணிக்கு கருட வாகனத்தில் அய்யா வீதி உலா வலம் வருதல் நிகழ்ச்சி நடந்தது.  கடந்த 9ம் தேதி மன் நாராயணசுவாமி தேரோட்டம் நடந்தது. இதில் சுவாமி தோப்பு பாலபிரஜாதிபதி அடிகளார் தேரை வடம்பிடித்து இழுத்து வைத்தார். இதில் தர்மபுரமடம் முன்னாள் ஊராட்சி தலைவர் டிபிஎம் ரசூல் முகமது மற்றும் அனைத்து சமுதாய மக்கள்  என திரளானோர் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து நிலையம் சேர்த்தனர். மதியம் அன்னதானம் நடந்தது.

Tags : Narayanaswamy Temple Therottam ,
× RELATED ஆலங்குளம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு