×

ஏர்வாடி நெம்ஸ் ஸ்டார்ட்டர்ஸ் பள்ளியில் ஆசிரியர் தினவிழா

ஏர்வாடி, செப் 10:  ஏர்வாடி நெம்ஸ் ஸ்டார்ட்டர்ஸ் பள்ளியில் ஆசிரியர் தினம் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுடன் கொண்டாடப்பட்டது.பள்ளி மேலாளர் சேக் ஹாஜா முகைதீன் தலைமை வகித்தார். அகமது பீர்முகைதீன் முன்னிலை வகித்தார். பள்ளி ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பரினா இறைவசனம் ஓதினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் செய்யது, சிந்தாகான், ரஸிதா, சரஸ்வதி, வேலம்மாள், செல்வராஜம்மாள், அவுக்காரம்மாள் மற்றும் நூர்ஜஹான் ஆகியோர் தாங்கள் ஆசிரியராக பணியாற்றிய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். மேலும் ஆசிரியர்களின் அனுபவங்களை கேள்விகளாக  ஓவ்வொரு ஆசிரியர்களும் வெளிப்படுத்தும் விதமாக போட்டி நடந்தது. ஆசிரியர் அப்துல் காதர், சேக்பீர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அகமது அம்மாள், முன்னாள் மாவட்ட கல்வி அதிகாரி உம்முசல்மா, மற்றும் ஏர்வாடியில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தங்கள் ஆசிரியர் பணியின் போது மாணவர்களுக்கு கற்பித்த முறை பற்றி கூறினர். பள்ளி சார்பில் அனைவருக்கும்  சிறப்பு பரிசும் ஈமான் கட்டளையின்  40வது ஆண்டு மலரையும் நினைவு பரிசாக அபுபக்கர் ஜின்னா வழங்கினார்.

Tags : Teacher Festival ,Airwadi Names Starters School ,
× RELATED இமயம் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியர் தினவிழா