×

கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு சாய்பாபா கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு பந்தல்குடியில் பால்குடம் ஊர்வலம்

அருப்புக்கோட்டை, செப். 10: அருப்புக்கோட்டை அருகே, பந்தல்குடியில், சாய்பாபா கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, 1008 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி அன்புமாடல் நகரில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் இரண்டாமாண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. இதனை முன்னிட்டு 1008 பால்குடமும், முளைப்பாரியும் எடுத்து வந்து பால் அபிஷேகம் செய்தனர். அதன்பின்பு கணபதி பூஜை, தேவதை அனுக்ஞை, மகாசங்கல்பம், யஜமானா அனுக்ஞை, மகாகணபதி, மகாலட்சுமி, சாய்நாதர், வேதகோஷம் ஆகியவற்றுடன் கூடிய சிறப்பு யாகங்கள் நடந்தன.  அதனை தொடர்ந்து வடுகர்கோட்டை குழுவினரின் கோலாட்ட நிகழ்ச்சியும், சென்னை அம்பத்தூர் சாய்மா பவுண்டேசனில் சாய்பாபவின் லீலைகள் என்னும் நாடகமும் நடந்தது. அதை தொடர்ந்து சாய்பாபாவிற்கு பால், இளநீர், சந்தனம், விபூதி, தேன், பன்னீர், கஸ்தூரி மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப,தூப ஆராதனை நடந்தன. சாய்பாபா சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.  பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.  1008 பால்குடம் ஊர்வலத்தை ரமணாஸ் கல்விக்குழும மேலாண்மைக்குழு தலைவர் பாரதி முருகன் துவக்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை பந்தல்குடி சாய்ராம் அறக்கட்டளை நிறுவனர் சுந்தரமூர்த்தி மற்றும் சுப்புலட்சுமி, அஜய்குமார், சக்திராஜவேல், மணிவண்ணன் ஆகியோர்
செய்திருந்தனர்.


Tags : Mangalore Sahibaba Temple Annual Celebration ,
× RELATED கடலூர் அருகே பேய் பீதியில் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் கிராமமக்கள்