×

குடிநீர் கேட்டு சாலை மறியல்

விருதுநகர், செப். 10: விருதுநகரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விருதுநகருக்கான குடிநீர் ஆதாரங்களான ஆனைக்குட்டம் அணை, ஒண்டிப்புலி, காருசேரி கல்குவாரிகள் பருவமழை பொய்த்ததால் வறண்டு கிடக்கின்றன. நிலத்தடிநீர் அதலபாதாளத்திற்கு சென்றால் கிணறுகளிலும் ஊற்று இல்லை. தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் வரும் தண்ணீரை கொண்டு 12 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் 15 நாட்களுக்கு ஒருமுறை வழங்கும் தண்ணீரும், 30 நிமிடம், 45 நிமிடங்களில் நிறுத்தப்படுகிறது. இதனால் பெண்கள் சாலைமறியல் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் புல்லலக்கோட்டை ரோட்டில் உள்ள ஏடிபி காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால், 30 நிமிடங்களில் நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து பெண்கள் நள்ளிரவில் புல்லலக்கோட்டை ரோட்டில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த விருதுநகர் மேற்கு போலீசார், நகராட்சி அதிகாரிகளிடம் போனில் பேசி தண்ணீர் திறப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, பெண்கள் கலைந்து சென்றனர்.

Tags : road ,
× RELATED பல மாதங்களாக குடிநீர் விநியோகம் இல்லை;...