×

ஓணம் பண்டிகை எல்லைகளில் தீவிர வாகன சோதனை

கூடலூர், செப்.10: ஓணம் பண்டிகையை முன்னிட்டு போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க எல்லைகளில் உள்ள தமிழக சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பாண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது, இந்தப் பண்டிகைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. தேனி மாவட்ட தமிழக கேரள எல்லையான குமுளி, கம்பம்மெட்டு, போடி மெட்டு வழியாக கேரள மாநிலத்திற்கு உணவுப் பொருட்களுடன் மதுபானங்கள், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் கடத்த வாய்ப்பு இருப்பதால் எல்லைப்பகுதிகளில் சோதனையை தீவிரப்படுத்த தேனி எஸ்பி பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.இதையெடுத்து குமுளி, கம்பம்மெட்டு, போடி மெட்டு பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் தமிழக போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி, மதுபானங்கள் மற்றும் கஞ்சா போதைப்பொருட்கள் மறைத்து எடுத்துச் செல்லப்படுகிறதா என சோதனை செய்கின்றனர். தீவிர சோதனைக்கு பின்னரே அனைத்து வாகனங்களும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

Tags : Vehicle Testing ,
× RELATED வாகன சோதனை என்ற பெயரில் வசூலில் கலக்கும் போலீசார்