×

ஆலோசனை கூட்டம்

தேனி, செப்.10: தேனி மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள் நிதி உதவி பெறுவது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் சோசியல் அவர்னஸ் இன்டக்டரல் அமைப்பு மூலம் நடத்தப்பட்டது.
கூட்டத்திற்கு துரைஅமேசான் தலைமை வகித்தார். ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முருகன் வரவேற்றார். இதில் ரிசர்வ் வங்கியின் உதவி பொதுமேலாளர் சுரேஷ்குமார், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் வேலுச்சாமி கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.

Tags : meeting ,
× RELATED டெல்லியில் நாளை காலை 11 மணிக்கு பிரதமர்...