×

நூறுநாள் வேலை ஊதியத்தை போஸ்ட் ஆபீசில் தர வேண்டும் பழங்குடிகள் வலியுறுத்தல்

மூணாறு, செப்.10: நூறுநாள் வேலை திட்ட ஊதியத்தை தபால் நிலையம் மூலமாக வழங்க வேண்டும் என பழங்குடி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.மூணாறில் அமைந்துள்ளது இடமலை குடி. இங்கு ஆண்டவன் குடி, சொசெட்டி குடி, இடமலையார் குடி போன்ற 24 குடிகள் உள்ளன. இங்குள்ள பழங்குடி மக்கள் வாழ்வாதாரத்திற்காக தினந்தோறும் நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை செய்கின்றனர். 200க்கும் அதிகமான பழங்குடி மக்கள் இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு மாதந்தோறும் ஊதியமானது மூணாறில் அமைந்துள்ள கூட்டுறவு வாங்கி மூலமாக வருகிறது. இந்த ஊதிய பணத்தை வாங்க 40 கிலோ மீட்டர் கரடு முரடான பாதையில் பயணம் செய்து பழங்குடிகள் வருகின்றனர்.
வங்கியில் வரிசையில் பலமணிநேரம் நின்று ஊதியத்தை வாங்கும் அவல நிலைக்கு தள்ளபட்டுள்ளனர். மதியம் வங்கிக்கு வந்தால் திரும்பி செல்ல இரவு ஆகிவிடுகிறது. இதனால் பழங்குடி மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
 எனவே பழங்குடி மக்கள் தங்கள் நூறு நாள் ஊதியத்தை தபால் நிலையம் மூலமாக பெறுவதற்கு வசதி செய்து தருமாறு கேரள அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இடமலைகுடி மக்களுக்கு தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு துவங்க அரசு உதவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Tribals ,post office ,
× RELATED மத்தியில் காங்கிரஸ் ஆட்சி...