×

கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

தேனி, செப். 10: தேவதானப்பட்டி கக்கன்ஜி காலனியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட கக்கன்ஜி காலனியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இக்காலனியை சேர்ந்தவர்கள் சுமார் 50 பேர் நேற்று தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்தின்போது, இதுவரை இக்காலனிக்கு அடிப்படை வசதிகளான சாலை வசதி, தெருவிளக்கு, சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. எனவே, அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர், கலெக்டர் பல்லவிபல்தேவை சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Tags : Collector ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...