ஓவியர் சங்க கூட்டம்

காரைக்குடி, செப்.10: காரைக்குடியில் தமிழ்நாடு ஓவியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக சேவுகன், செயலாளராக பால்பாண்டியன், பொருளாளராக ஜலாலுதீன், கவுரவத் தலைவராக கண்ணா, துணை தலைவராக கம்பனூர் கலைஞன், அமைப்பு செயலாளராக கிருஷ்ணமூர்த்தி, துணை செயலாளராக முருகேசன், இணை செயலாளராக சிங்காரவேலு, செய்தி தொடர்பாளராக மாயாண்டி உள்பட பலர் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags : Painters Association Meeting ,
× RELATED காளையார்கோவில் கண்மாயில் குவிந்து கிடக்கும் குப்பைகள்