மணல் திருட்டு லாரி பறிமுதல்

திருப்புவனம், செப். 10: திப்புவனம் அருகே, டி.பாப்பாங்குளம் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளி வருவதாக, மேலச்சொரிக்குளம் வி.ஏ.ஒ. செந்திலுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அப்பகுதியில் அவர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை நடத்தினார். அப்போது, அனுமதியின்றி மணல் அள்ளி வந்த லாரியை மடக்கி பிடித்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில், திருப்புவனம் போலீசார் லாரியை பறிமுதல் செய்து அதில் இருந்த கதிரேசன், கவாஸ்கர், கணேசன் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags :
× RELATED சிவகங்கை அருகே கிடப்பில் சாலை பணி: அவதியில் கிராமமக்கள்