×

வகுப்பறையில் மாணவி தற்கொலை சம்பவத்தில் பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்கள்

மதுரை, செப்.10: மதுரையில் பள்ளி மாணவி வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவத்திற்கு நீதி கேட்டு பள்ளியை உறவினர்கள் நேற்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பேரில் விரிவான விசாரணை கோரி எம்எல்ஏ கருணாஸ் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்தார். மதுரை புதூரில் உள்ள தனியார் பெண்கள் பள்ளியில் கடந்த 6ம் தேதி பிளஸ்1 மாணவி ஒருவர் வகுப்பறையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவி சாவுக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி மாணவியின் உறவினர்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் எம்எல்ஏ கருணாஸ் மதுரை நகர் போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் நேற்று மனு வழங்கினார். இதில், மாணவி சாவு குறித்து விரிவான நியாயமான விசாரணை நடத்தும்படி கோரிக்கை விடுத்திருந்தார்.
கருணாஸ் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘மாணவி இறப்பு குறித்து விரிவான விசாரணை கோரி மனு கொடுத்துள்ளேன். எந்த பாகுபாடும் இன்றி, நடுநிலையோடு விசாரணை இருக்க வேண்டும். இதன்பேரில் சிறப்பு பெண் அதிகாரி நியமிக்கப்பட்டு
இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் விசாரணையின் முடிவை தெரிவிப்பதாகவும் போலீஸ் கமிஷனர் தெரிவித்தார். மேலும், தினமும் சிறியோர், பெரியோர் என 3 முதல் 6 பேர் வரை தற்கொலை செய்வதாகவும், இதுகுறித்த விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கவும் திட்டமிட்டிருப்பதாக கமிஷனர் தெரிவித்தார்’’ என்றார்.

Tags : Relatives ,school ,classroom ,student suicide ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி