×

இமானுவேல் சேகரன் நினைவு இடத்திற்கு ெசல்லும்வாகனங்களின் வழித்தடங்கள் அறிவிப்பு பாதுகாப்பில் 1,500 போலீசார்

மதுரை, செப். 10: இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு வாடகை வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடள்ளனர்.இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு எஸ்பி மணிவண்ணன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘விருதுநகரில் இருந்து வரும் வாகனங்கள் கள்ளிக்குடி, திருமங்கலம், பெருங்குடி, ராம்நாடு ரிங்ரோடு வழியாக பரமக்குடி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அருப்புக்கோட்டையிலிந்து வரும் வாகனங்கள் பாரபத்தி, பெருங்குடி, ராம்நாடு ரிங்ராடு வழியாக பரமக்குடி செல்ல வேண்டும்.வில்லிபுத்தூரில் இருந்து வரும் வாகனங்கள் டி.கல்லுப்பட்டி, திருமங்கலம், பெருங்குடி, ராம்நாடு ரிங்ரோடு வழியாக பரமக்குடி செல்ல வேண்டும்.தேனியில் இருந்து வரும் வாகனங்கள் ஆண்டிப்பட்டி கணவாய், உசிலம்பட்டி, செக்கானூரணி, மதுரை வழியாக ராமநாடு ரிங்ரோடு வழியாக பரமக்குடி செல்ல வேண்டும். திண்டுக்கலில் இருந்து வரும் வாகனங்கள் பாண்டியராஜபுரம், வாடிப்பட்டி, சமயநல்லூர், பரவை, மதுரை நகர் வழியாக ராம்நாடு ரிங்ரோடு வழியாக பரமக்குடி செல்ல வேண்டும்.நத்தத்தில் இருந்து வரும் வாகனங்கள் கடவூர், ஊமச்சிக்குளம், கடச்சனேந்தல், ஒத்தக்கடை, ராம்நாடு வழியாக பரமக்குடி செல்லவும், திருச்சியிலிருந்து வரும் வாகனங்கள் மேலூர், ஒத்தக்கடை, ராம்நாடு ரிங்ரோடு வழியாக பரமக்குடி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மதுரையில் இருந்து புறப்படும் வாகனங்கள் மற்றும் மதுரை வழியாக செல்லும் வாகனங்கள் வரிச்சியூர் வழியாகவும், பழைய சிலைமான் ரோடு வழியாகவும், நெடுங்குளம் வழியாகவும் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் மேலூர் வழியாக திருவாதவூர் செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருந்து கிளம்பும் வாகனங்கள் அந்தந்த காவல் நிலையங்களை அணுகி அனுமதி சீட்டு பெற்று செல்ல வேண்டும். மதுரை மாவட்டத்தில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : policemen ,memorial ,Emanuel Sheeran ,
× RELATED காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்