×

பழநி கோயிலில் கற்பாதை சீரமைக்கும் பணி தீவிரம்

பழநி, செப். 10: பழநி கோயிலில் கற்பாதைகள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு பல இடங்கள் தொன்மை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி மலைக்கோயில் மேல்தளத்தில் உள்ள வின்ச் நிலையத்தில் படிப்பாதை கற்களை கொண்டு ஏற்படுத்தப்பட்டிருந்தது. பழமையின் காரணமாக அதனை மாற்றாமல் கோயில் நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இப்படிப்பாதையில் ஆங்காங்கே கற்கள் பெயர்ந்தும், ஒழுங்கின்றி கோணலாகவும் இருந்து வந்தது. இதனால் இப்பாதையை பயன்படுத்தும் பக்தர்கள் தட்டி விட்டு காயம்படுவதும், மழைகாலங்களில் மழைநீர் குளம்போல் தேங்குவதுமாக இருந்தது. இதை சீரமைக்குமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்ெதாடர்ந்து நேற்று வின்ச் நிலையத்தின் மேல்தளத்தில் உள்ள பாதைகளில் உள்ள கற்களை சீரமைக்கும் பணி துவங்கி உள்ளது. கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டும், உழி கொண்டும் சமப்படுத்தப்பட்டும் வருகிறது. மேலும் கற்களை இணைக்கும் பகுதிகள் சிமெண்ட் கலவைகள் கொண்டு ஒட்டப்பட்டும் வருகிறது. இப்பணிகள் நிறைவடைந்ததும் பக்தர்கள் சிரமமின்றி நடக்கலாம் என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Palani Temple ,
× RELATED பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள...