×

பழநி அருகே மகளிர் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்

பழநி, செப். 10: பழநி அருகே சின்னக்கலையம்புத்தூரில் பழநியாண்டவர் மகளிர் கல்லூரியில் நேற்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. முதல்வர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். விழாவில் கேரள பாரம்பரிய ஆடைகள் அணிந்து வந்திருந்த மாணவிகள் கல்லூரியின் வளாகத்தில் பலவகை பூக்களை கொண்டு அத்தப்பூ கோலமிட்டனர். தொடர்ந்து ஓணம் பண்டிகையின் வரலாறு, விழாவின் நோக்கம் மற்றும் 0கொண்டாட்ட முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Onam Celebration ,Ladies College ,Palani ,
× RELATED பழநி மலைக்கோயில் வின்ச்சில்...