×

காங்கயத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

காங்கயம், செப். 10:  காங்கயம் நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி வீசப்படும் மக்காத 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தமிழக அரசு தடை செய்துள்ளது.  இதை மீறி விற்பனை செய்பவர்கள், பயன்படுத்துபவர்கள் ஆகியோருக்கு அபராதம் விதிப்பதோடு, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என
அறிவிப்பு வெளியிட்டிருந்தன. இந்நிலையில் காங்கயம் நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம், நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் பல்வேறு இடங்களில் நேற்று சோதனை செய்தனர். இதில் கரூரை சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவர் ஆம்னி வேனில் ஒரு டன் அளவில் பிளாஸ்டிக் பொருட்களை, காங்கயம் மளிகை கடைகளுக்கு சப்ளை செய்ய கொண்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள் பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்து, அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Tags :
× RELATED உடுமலை அருகே திடீர் சாலை மறியல்