சேந்தமங்கலம் விவேகா பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

சேந்தமங்கலம், செப்.10: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள பொன்னமாபுதூர்  விவேகா மெட்ரிகுலேசன் பள்ளியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் பாண்டுரங்ககுப்தா முன்னிலை வகித்தார். இதில்  ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியர்கள் ராமசாமி, அமிர்தலிங்கம், சீனிவாசன், வீரப்பன், சுந்தரம் ஆகியோர்  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். இதையடுத்து மாணவர்கள் ஆசிரியர்களை பாதபூஜை செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்

Tags : Teachers ,Celebration ,Senthamangalam Viveka School ,
× RELATED நான்கு ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லை இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்