×

முள்ளுக்குறிச்சியில் சட்டவிரோதமாக டிரான்ஸ்பார்மர் அமைப்பு அதிகாரிகள் மீது புகார்

நாமக்கல், செப்.10: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிசந்திரனிடம், ராசிபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜ் அளித்த புகார் மனு விபரம்:ராசிபுரம் அருகே முள்ளுகுறிச்சி கிராமத்தில், மின்வாரிய அலுவலகம் அருகில், சுமார் 300 மீட்டர் தொலைவில் மின்வாரிய அனுமதி பெறாமலும், அரசுக்கு செலுத்த வேண்டிய உரிய கட்டணம் ஏதும் செலுத்தாமலும், சட்டவிரோதமாக ஒரு டிரான்ஸ்பார்மர் மற்றும் 2 மின்கம்பங்களை மின்வாரிய ஒப்பந்தக்காரர் 0அமைத்துள்ளார். அதை மின்வாரிய கம்பத்தில் இணைத்து மின்வாரிய மின்சாரத்தை திருட்டு தனமாக  எடுத்து  இயங்கி வந்துள்ளார். தனி நபர் தன்னுடைய சொந்த இடத்தில் உள்ள மின் இணைப்பாக இருந்தாலும், அதில் உள்ள மீட்டர் பெட்டியை தொடாமல், எல்லையை தாண்டினால் குற்றச் செயலாகும்.

டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பங்கள் அமைத்த நபர் மீது, மின்வாரிய அதிகாரிகள்  ஆயில்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு, அந்த புகார் மனுவை திரும்ப பெற்றுள்ளார்கள். அரசு அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக டிரான்ஸ்பார்மர் மற்றும்  மின்கம்பங்கள் அமைத்து, மின்சாரத்தை திருடிய  நபர் மீதும்,  உடந்தையாக இருந்த மின்வாரிய அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கரை திரும்பாத மீனவர்கள் குறித்து...