×

சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் ரப்பர் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நாமக்கல், செப்.10:  ராசிபுரம் அருகே, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் ரப்பர் தொழிற்சாலையை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஆர்ஓவிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து தமிழ்ப்புலிகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் அறிவுதமிழன் உள்ளிட்டோர், நேற்று டிஆர்ஓ ரவிச்சந்திரனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:ராசிபுரத்தை அடுத்த அத்தனூர் அருகே, தனியாருக்கு சொந்தமான ரப்பர் தொழிற்சாலை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து, இரவு நேரங்களில் அதிக அளவு புகை வெளியேற்றப்படுகிறது. இந்த புகையை சுவாசிப்பதால், அப்பகுதி மக்கள் பல்வேறு விதமான நோய்களுக்கு ஆளாகும் சூழ்நிலை உள்ளது. மேலும், தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், போர்வெல் மற்றும் காற்று மாசு அடைகிறது. எனவே, மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், இந்த தொழிற்சாலையை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : rubber plant ,
× RELATED மது விற்ற 8 பேர் கைது