×

சிங்கிலிப்பட்டியில் சீரான குடிநீர் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

நாமக்கல், செப்.10: நாமக்கல்லை அடுத்துள்ள சிங்கிலிப்பட்டியில், குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்யக் கோரி, ஏராளமான பெண்கள் காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நாமக்கல்லை அடுத்த சிங்கிலிப்பட்டி கிராம ஊராட்சியில், பொரசபாளையம் மற்றும் அருந்ததியர் காலனியில் 2 ஆயித்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த 3 பகுதியிலும் பஞ்சாயத்து நிர்வாகத்தின் சார்பில், 10 போர்வெல் போடப்பட்டுள்ளது. மேலும், 7 குடிநீர் சேமிப்பு தொட்டிகளும் கட்டப்பட்டுள்ளது. காவிரி நீருடன் போர்வெல் நீரை கலந்து, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில போர்வெல்லில் தண்ணீர் வற்றி விட்டது. மேலும், மின் மோட்டார்களும் பழுது அடைந்து விட்டது. இதனால் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

தற்போது 3 அல்லது 5 நாட்களுக்கு ஒரு முறை தான், தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாக,  தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் சூழலுக்கு இப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து, நாமக்கல் பிடிஓ அலுவலகத்தில் பல முறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தங்கள் பகுதிக்கு சீரான இடைவெளியில் தண்ணீர் விநியோகம் செய்யக்கோரி, திரளான பெண்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தை, காலி குடங்களுடன் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், டிஆர்ஓ ரவிச்சந்திரனை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

Tags : Siege ,Office ,Collector ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற...