×

பந்தலூரில் ஏடிஎம் மையம் திறப்பு

பந்தலூர், செப்.10:பந்தலூர் அருகே மேங்கொரேஞ் பகுதியில் புதிய ஏடிஎம் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. பந்தலூர் பஜார் பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஒரு ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பணம் விரைவாக எடுக்க முடியாமல் சிரமப்பட்டனர். அதனால் மேங்கொரேஞ் தனியார் தேயிலைத்தோட்டம் பகுதியில் தோட்டதொழிலாளர்கள் மற்றும் அனைத்து தரபினர்களும் பயன் பெறும் வகையில் ஸ்டேட் பாங்க் சார்பில் ஏடிஎம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பணிகள் முடிவு பெற்று நேற்று ஏடிஎம் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. பாரி ஆக்ரோ தோட்ட பொது மேலாளர் முரளி படிக்கல் முன்னிலை வகித்தார். மூத்த தோட்ட தொழிலாளி அம்சா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தோட்ட பராமரிப்பு மேலாளர் வினோத். ராமச்சந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Opening ,ATM Center ,
× RELATED கொடைக்கானலில் இசேவை மையம் திறப்பு