×

போச்சம்பள்ளி அருகே கால்நடை பாதுகாப்பு திட்ட மருத்துவ முகாம்

போச்சம்பள்ளி, செப். 10: போச்சம்பள்ளி அருகே உள்ள அத்தகானூர் கிராமத்தில், கால்நடை பாதுகாப்பு திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு  மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். ஊத்தங்கரை மனோரஞ்சிதம்  நாகராஜ் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். மண்டல கால்நடை துணை இயக்குனர் டாக்டர்  மனோகரன் வரவேற்றார். முகாமை துவக்கி வைத்து கலெக்டர் பிரபாகர் பேசியதாவது: கால்நடை  மருத்துவ குழுவினர் மூலம் கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல், ஸ்கேன் மூலம் சினை பரிசோதனை, மலட்டு  நீக்க சிகிச்சை, குடல்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், கண்டுவதக அறுவை  சிகிச்சை அளிக்கப் படுகிறது. மேலும்,  கால்நடைகளுக்கு தாதுஉப்பு கலவை  வழங்குதல், கோழிகளுக்கு தடுப்பூசி போடுதல், கால்நடை வளர்ப்பு சம்பந்தமான  விளக்கங்கள் அளித்தல், தீவினப்பயிர் வளர்ப்பு பற்றிய பயிற்சி  அளிக்கப்படுகிறது.

நடப்பு ஆண்டு மாவட்டத்தில் 140 கால்நடை மருத்துவ  முகாம்கள் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு கால்நடை முகாம் நடத்தியதில் 1,38,700  கால்நடைகள் பயனடைந்துள்ளன. மாடுகள் 300 கன்றுகள் ஈன்று ஒரு லட்சம் லிட்டர்  பால் கூடுதலாக கிடைக்கிறது. மேலும், 4,200 பசுகளுக்கு சினை ஊசி போடப்பட்டு  உள்ளது. மத்திகிரி கால்நடை பண்ணையில் கோழி குஞ்சுகள் தயார் செய்கிற  அளவிற்கு கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. தளவாடங்கள் பொருத்தும் பணிகள்  முடிந்தவுடன் கோழி குஞ்சுகள் வளர்த்து, கிராமங்களில் உள்ள மகளிர் சுயஉதவி  குழுவினர் மற்றும் கோழி வளர்ப்போருக்கு தலா 50 கோழி குஞ்சுகள்  வழங்கப்படும் என்றார். இந்த முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை துணை  இயக்குனர் டாக்டர் இளங்கோவன், உதவி இயக்குனர் டாக்டர் மரியசுந்தர்,  கே.வி.கே. விஞ்ஞானி டாக்டர் சுந்தர்ராஜ், பிஆர்ஓ சேகர், பர்கூர் தாசில்தார்  கோபிநாத், பிடிஓ தமிழரசன், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் சக்தி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Livestock Protection Medical Camp ,Pochampally ,
× RELATED போச்சம்பள்ளியில் உள்ள பிரபல...