4 ஆண்டாக பூட்டியுள்ள இ-சேவை மையத்தை திறக்க வலியுறுத்தல்

கடத்தூர், செப்.10:  கடத்தூர் அருகே கட்டி முடித்து 4 ஆண்டாக பூட்டி கிடக்கும் இ-சேவை மையத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடத்தூரை அடுத்த புட்டிரெட்டிப்பட்டியில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், 2013-2014ம் ஆண்டு ₹14 லட்சம் மதிப்பில் இ-சேவை மையம் கட்டப்பட்டது. ஆனால், பணிகள் முடிந்து 4 ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் சாதி சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், புதிய குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை பெற, 30 கிமீ தொலைவில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, பூட்டி கிடக்கும் இ-சேவை மையத்தை, உடனடியாக திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பாபநாசம்- சாலியமங்கலம் சாலையில்...