×

ராஜஸ்தானில் வேலைக்கு சென்ற மகன் மாயம்

ஈரோடு, செப். 10: கோபி அடுத்துள்ள சிறுவலூர் ஊராட்சி குப்பாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (61). மாற்றுத்திறனாளியான இவரது மகன் நாகராஜ் (29). இவர், நம்பியூர் வெள்ளாளபாளையத்தை சேர்ந்த சம்பத் என்பவரின் போர்வெல் லாரிக்கு வேலைக்கு சென்றார். அப்போது கடந்த செப்டம்பர் மாதம் ராஜஸ்தானுக்கு போர்வெல் லாரியுடன் சென்ற நாகராஜ் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து தந்தை சண்முகம் போர்வெல் லாரி உரிமையாளர்களிடம் பல முறை கேட்டும் முறையாக பதிலளிக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த சண்முகம், போர்வெல் லாரி வேலைக்கு சென்று மாயமான தனது மகனை மீட்டுக்கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரி நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதில், தனது மகன் மாயமான விவகாரத்தில் போர்வெல் லாரி உரிமையாளர் மிரட்டல் விடுத்து வருவதாகவும், தனது மகனை மீட்டுக்கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

Tags : Mayam ,Rajasthan ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டத்தில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகன் கைது