புதுகையில் வன உயிரின வாரவிழா கொண்டாட்டம்

புதுக்கோட்டை, செப்.10: ஒவ்வொரு ஆண்டும் வனத்துறையின் சார்பில் அக்டோபர் மாதம் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை வன உயிரின வாரவிழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வன உயிரின பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டிகள் மற்றும் வினாடி வினா போட்டிகள் நேற்று புதுக்கோட்டையில் உள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இதில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதேபோல கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளை மாவட்ட வன அலுவலர் ஆனந்தகுமார் பார்வையிட்டார். இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதேபோல போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் வனச்சரக அலுவலர்கள் சதாசிவம், சங்கர், வனவர்கள், வனக்காப்பாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Wildlife Weekend Celebration ,
× RELATED ஆட்களை ஏற்றி வந்த 2 சரக்கு ஆட்டோக்களுக்கு அபராதம்