×

நம்பம்பட்டி சாலை படுமோசம் பொதுமக்கள் அவதி

புதுக்கோட்டை, செப்.10: குண்டும் குழியுமாக உள்ள நம்பம்பட்டி சாலையை  சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ளது நம்பம்பட்டி கிராமம். இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்குள்ள சாலை மிகவும் மோசமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சாலை மீண்டும் புதுப்பிக்கப்படவே இல்லை.

தேர்தலின்போது வாக்கு கேட்டு வரும் அரசியல்வாதிகள் அப்போது வாக்குறுதி அளித்துவிட்டு செல்கின்றனர். இந்த அறிவிப்பு தண்ணீரில் எழுதி வைத்த கதையாக உள்ளது. இந்த மோசமான சாலையால் பொதுமக்கள் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். மேலும், வாகன ஓட்டிகளும் நித்தம் அவதிக்குள்ளாகி வருகி–்ன்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் புகார் அளித்தும் எந்தவித பயனுமில்லை. எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நம்பம்பட்டி சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Nampampatti Road ,public ,
× RELATED கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள்...