×

கரூர் மில்கேட் அருகில் பயன்பாடில்லாத சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியால் பொதுமக்கள் அவதி

கரூர், செப். 10: கரூர் மில்கேட் அருகே செயல்படாமல் உள்ள சின்டெக்ஸ் டேங்கினை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட மில்கேட் பகுதியில் இருந்து வஉசி தெருவுக்கு செல்லும் பகுதியில் இந்த பகுதி மக்கள் பயன்பாட்டுக்காக சின்டெக்ஸ் டேங்க் அமைத்து பல மாதங்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது.

இந்த பகுதியை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகளும், மருத்துவமனை போன்ற பல்வேறு நிறுவனங்களும் இந்த பகுதியில் உள்ளன. ஆனால் கடந்த சில மாதங்களாக செயல்படாமல் உள்ள சின்டெக்ஸ் டேங்கினால் தண்ணீர் பெற முடியாமல் இந்த பகுதியினர் கடுமையாக அவதிப்பட்டு வருவதோடு, வேறு இடங்களுக்கு தண்ணீருக்காக செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். இதனை சீரமைத்து திரும்பவும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பார்வையிட்டு, இந்த டேங்கினை திரும்பவும் பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : public ,Syntex ,Karur Milkgate ,
× RELATED சேதமடைந்த நிலையில் பொதுமக்களை...