×

கரூர் ராயனூரில் சாலையோரம் கோழிக்கழிவு குப்பைகள் கொட்டுவதால் கடும் துர் நாற்றம், சுகாதார சீர்கேடு

கரூர், செப். 10: கரூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் ராயனூர் பகுதி உள்ளது. அனைத்து கடைகளும் ராயனூர் பிரதான சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையில் சிலர் ராயனூர் சாலையோரம் கோழிக்கழிவுகள் உட்பட பல்வேறு கழிவுகளை குப்பைகளோடு குப்பையாக கொட்டிவிட்டு செல்வதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடும் துர்நாற்றமும் இந்த பகுதி முழுவதும் வீசுவதாகவும் கூறப்படுகிறது. இதன் அருகிலேயே இலங்கை தமிழர்கள் முகாமும் உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியினர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும் வகையில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். அதிகாரிகள் பார்வையிட்டு இதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

Tags : Karur Rayonur ,
× RELATED கரூர் ராயனூர், மில்கேட் பகுதியில்...