×

முத்துப்பேட்டையில் ஆபத்தான நிலையில் ஆசாத்நகர் தற்காலிக அங்கன்வாடி கட்டிடம் புதியதாக கட்டித்தர பெற்றோர் கோரிக்கை

முத்துப்பேட்டை, செப்.10: முத்துப்பேட்டை ஆசாத்நகர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் ஒன்று இயங்கி வருகிறது. இதில் ஆசாத்நகர், ரகுமத் நகர் போன்ற சுற்றுப்பகுதியை 20குழந்தைகள் உள்ளனர். மேலும் குழந்தைகளை பராமரிக்கவும் கல்வி கற்றுக்கொடுக்கவும் ஒரு பணியாளர் மற்றும் ஒரு உதவியாளரும் உள்ளனர். இதற்கு என தனி கட்டிடம் இல்லாததால் பள்ளி தலைமையாசிரியர் அறையை பள்ளி நிர்வாகம் தற்காலிகமாக வழங்கியுள்ளது. மேலும் அதே பகுதியில் உள்ள காலி கட்டிடத்தில் கட்டித்தரவும் போதிய ஆவணங்களுடன் உரிய அதிகாரிகளிடம் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்பொழுது உள்ள இந்த தற்காலிக கட்டிடத்தின் சிலாப், சுவர்கள், படிகள் என கட்டிடத்தின் பல பகுதிகள் விரிசல் ஏற்பட்டு சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்துள்ளது. இதில் அந்த விரிசல் வழியாக மழைநீர் உள்புகுந்து மாதக்கணக்கில் தண்ணீர்கசிவு ஏற்பட்டு குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் எந்த நேரத்திலும் மேல் பகுதி சிலாப்பூச்சுக்கள் பெயர்ந்து விழுந்து மிகப்பெரிய பேராபத்தை ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ளன.

அதேபோல் தரைகளும் பள்ளங்கள் ஏற்பட்டு விசஜந்துக்கள் ஊடுருவி வருகிறது. இதனால் குழந்தைகள் பயன்படுத்த முடியாத நிலை. இதனால் இந்த கட்டிடத்தை சீரமைத்து தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் ஆனால் சீரமைக்க அதிகாரிகள் முன்வரவில்லை. தற்பொழுது கட்டிடம் முழுவதும் படிபடியாக சேதமாகி வருவதால் குழந்தைகளை பெற்றோர;கள் அனுப்ப அச்சமடைந்து தயங்கி வருகின்றனர். எனவே இப்பகுதி குழந்தைகள் நலன்கருதி உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு ஆபத்தான நிலையில் உள்ள தற்காலிக அங்கன்வாடி கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும். அதேபகுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் புதிய கட்டிடம் கட்டித்தரவேண்டும் என்று இப்பகுதி மக்களும், இங்கு பையிலும் குழந்தைகளின் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Parents ,building ,Azadnagar ,Anganwadi ,
× RELATED கொல்கத்தாவில் 5 மாடி கட்டிடம் இடிந்து 9 பேர் பலி