×

புதிய மின்சார சட்ட திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் பட்டயப் பொறியாளர்கள் சம்மேளனம் கோரிக்கை

மன்னார்குடி, செப். 10: புதிய மின்சார சட்ட திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என அகில இந்திய மின்வாரிய பட்டயப் பொறியாளர்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, அகில இந்திய மின்வாரிய பட்டயப் பொறியாளர்கள் சம்மேளனத் தின் தென் மண்டல தலைவர் பொறியாளர் சம்பத் மன்னார்குடியில் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அகில இந்திய மின்வாரிய பட்ட யப் பொறியாளர்கள் சம்மேளனம் பொதுக்குழு கூட்டம் புது தில்லி அருகே நொய்டாவில் அண்மையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அனைத்து மாநில மின் வாரியங்களின் பட்டயப் பொறியாளர்கள் சங்கங்களின் பிரதி நிதிகள் கலந்து கொண்டனர். பொதுக்குழு கூட்டத்தில், புதிய மின்சார சட்ட திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மின்துறை தனியார் மயத்தை கைவிட வேண்டும். அனைத்து மாநில மின் துறை பணியாளர்களுக்கும் சம வேலைக்கு சமமான ஊதியம் வழங்க வேண்டும். மின்வாரியங்களில் ஏற்படும் விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்வாரியங்களில் ஏற்படும் மின் இழப்புகளை குறைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானங்கள் முறையாக மத்திய மாநில அரசுகளுக்கு அனுப்பப் பட்டுள்ளன. இவற்றை மத்திய மாநில அரசுகள் பரிசீலித்து கோரிக்கைகள் நிறைவேற உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், அகில இந்திய மின்வாரிய பட்டயப் பொறியாளர்கள் சம்மேளனத்தின் புதிய நிர்வாகிகள் தேர்த்தேடுக்கப்பட்டனர். அதில் தமிழ்நாடு மின் வாரிய பொறியாளர் சங்கத்தில் மாநில தலைவராக செயல்பட்டு வந்த அந்தோணி படோவராஜ் அகில இந்திய துணைப் பொதுச் செயலாளராகவும், திருச்சி மண்டல செயலாளராக செயல்பட்டு வந்த பொறியாளர் சம்பத் தென் மண்டல தலைவராகவும், நரசிம்மன் தென் மண்டல அமைப்பு செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு அதில் குறிப்பிடப் பட்டிருந்தது.

Tags : government ,Chartered Engineers Federation ,
× RELATED அரசு ஊழியர்களுக்காக நெல்லையில்...