13ம் தேதி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், செப். 10: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி மற்றும் மாவட்டத்தலைவர் ரங்கராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, டெல்டா மாவட்டங்களில் கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பொய்த்துப்போன நிலையில் நடப்பாண்டில் சம்பா சாகுபடியை மேற்கொள்ளலாம் என விவசாயிகள் நம்பிக்கையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடைமடை பகுதியான திருவாரூர் மாவட்டத்திற்கு இதுவரையில் முழுமையான அளவில் தண்ணீர் ஆறுகளை சென்றடையவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் சாகுபடி பணிகளை துவங்க முடியாமல் இருந்து வருகின்றனர்.

எனவே அனைத்து ஆறுகளிலும் முறை வைக்காமல் தண்ணீர் விட கோரியும்,தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடன் வழங்க கோரியும், விதைகள் மற்றும் உரங்களை தட்டுப்பாடின்றி வழங்க கோரியும் வரும் 13 ம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : demonstration ,Farmers Association ,
× RELATED காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்