×

உபரிநீர் திட்டத்தை கைவிட வேண்டும் காவிரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

திருவாரூர், செப் .10: உபரிநீர் திட்டங்களால் டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்பதால் இந்த திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்பதால் இந்தத் திட்டத்தினை கைவிட வேண்டும், ராசி மணலில் தமிழகம் சார்பில் புதிய அணை கட்டுவதற்கு அதற்கான முன்மொழிவு குறித்து மத்திய அரசுக்கு அனுப்பி கட்டுமான பணிகளை விரைவில் துவங்கிட வேண்டும் ,கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை அமைத்திட வேண்டும் ,மேட்டூர் முதல் டெல்டா மாவட்டங்களின் கடைமடை பாசன வரையில் நிர்வாக அதிகாரங்களை மீண்டும் தஞ்சை காவிரி கண்காணிப்பு பொறியாளர் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் போன்ற கோரிக்கைகள் குறித்து நேற்று திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் மனு அளித்தனர்.

Tags : Cauvery Farmers Union ,
× RELATED கிராமப்புறங்களில் குழாய் மூலம்...